இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து குத்தாலத்தில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்; 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதிகள் வெறிச்சோடியது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜனவரி, 2025

இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து குத்தாலத்தில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்; 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதிகள் வெறிச்சோடியது.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கோயில் மனைகளில் குடியிருப்போர், சிறு வணிகம் செய்வோர், விவசாய நிலங்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்கு வாடகையை உயர்த்தி, அத்தொகையை முன் தேதியிட்டு செலுத்த நிர்பந்திக்கப்படுவதை கண்டித்து வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இப்பகுதி மக்கள் பலர் பல தலைமுறைகளாக குடியிருந்தும், சிறு வணிகம் செய்தும் வருகின்றனர். இந்துசமய அறநிலையத்துறையின் சார்பாக நியாய வாடகை சட்டம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தி வந்த பகுதி தொகையை மாத வாடகையாக மாற்றம் செய்து ஒருதலைப்பட்சமாக வாடகையை பல மடங்கு உயர்த்தியும்.


உயர்த்தப்பட்ட வாடகையை நிலுவைத் தொகை என்ற பெயரில் பல லட்சங்கள் கணக்கிட்டு நிலுவைத் தொகையினை உடனே செலுத்த வேண்டும் எனவும் செலுத்த தவறினால் வாடகை உரிம ஒப்பந்தத்தை மீறியதற்காக இந்து சமய அறநிலையத்துறை சட்ட பிரிவுகளின்படி  ஆக்கிரமிப்பாளர்களாக கருதி உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்துசமய அறநிலையத்துறை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டம் காரணமாக குத்தாலம் கடைவீதியில் 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர். 


இதன் காரணமாக குத்தாலம் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி காலை 11 மணி அளவில் இந்து சமய அறநிலையை துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad